டெல்லி:

ந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி,  பெங்களூர் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே நடைபெற்றது.

இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 18.4 ஓவரில் 152 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில்  டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதையடுத்து  பெங்களூர் அணி மட்டையுடன் களமிறங்கியது.

பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்துள்ளது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக வீரர் விராட் கோலி 41 (33) ரன்கள், மொயின் அலி 32 (18) ரன்கள் எடுத்தனர். டெல்லி அணி பவுலர் ரபாடா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். இதனால் டில்லி அணி ரசிகர்கள் சோகமாயினர். ஆனால், அடுத்து இறங்கிய பிரித்வி ஷா  கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது பிரித்வி ஷா 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து வந்த  இங்கிராம் 22 ரன்னிலும், ரிஷப் பந்த் 18 ரன்னிலும், கிறிஸ் மோரிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரே ஓவரிலில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி அணி சற்று தடுமாறத் தொடங்கியது. இருந்தாலும் ஆட்டத்தை திறமையாக எடுத்துச் சென்றனர்.

இதன் காரணமாக , 18.4 ஓவரில் 152 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட்கோலியின் பெங்களூரு அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது குறிப்பிடத்தக்கது.