வாஷிங்டன்

ஐ நா சபையின் பயங்கரவாதிகள் பட்டியலில் ஜெய்ஷ் ஈ முகமது தலைவன் மசூத் அசாரை சேர்க்க அமெரிக்கா புது முயற்சி எடுத்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம் பல பயங்கரவாத செயல்களை செய்துள்ளது.   இந்தியாவில் நடந்த பாராளுமன்ற தாக்குதல் மற்றும் சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்கள் இந்த இயக்கத்தால் நடத்தப் பட்டவை ஆகும்.   இந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் க்கு பாகிஸ்தான அடைக்கலம் அளித்துள்ளது.

இந்த இயக்கத்தை சர்வதேச அளவில் தடை செய்து இயக்கத்தலைவன் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல உலக நடுகள் ஐநசபைக்கு கோரிக்கை விடுத்தன.

அவ்வாறு தடை விதிக்கப்ப்பட்டால் மசூத் அசார் எந்த ஒரு நாட்டுக்கும் செல்ல முடியாது.  அவனது சொத்துக்கள் முடக்கப்படும்.   அவன் சர்வதேச காவலில் வைக்கப்படுவான்.   இந்த கோரிக்கையை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்தது.   சீனா தொடர்ந்து இவ்வாறு இந்த கோரிக்கைக்கு தடை விதித்து வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மிகவும் ஆர்வம் கொண்டுள்ளன.  ஆகவே புதிய முயற்சியாக 15 நாடுகள் கொண்ட கவுன்சிலுக்கு அமெரிக்கா புதிய தீர்மானம் ஒன்றை இயற்றி அனுப்பி உள்ளது.   இந்த தீர்மானத்துக்கு பிரான்ஸ் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.