இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ். தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, ’83 என்ற பெயரில் பிரம்மாண்டமாக இந்திப் படம் ஒன்று உருவாகி வருகிறது.
கபீர் கான் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே 15-ந் தேதி லண்டனில் நடக்கிறது. தொடர்ந்து 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
பங்கஜ் திரிபாதி, சாஹில் கட்டார், சஹீப் சலீம், தாஹிர் ராஜ் பாசின் உள்பட பலர் நடிக்கும் இப்படத்தில் தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவாவும், சந்தீப் பட்டிலாக அவரது மகன் சீரங்கும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் கபில்தேவ் மகள் அமியா தேவ் (Amiya) உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.
மும்பை கிரிக்கெட் மைதானத்தில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பல்விந்தர் சிங் சாந்து கிரிக்கெட் பயிற்சி அளித்து வர உதவி இயக்குனர் என்ற முறையில் அமியா இதனை கவனித்து கொள்கிறார்.