டில்லி:
தமிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் விளம்பரங்கள் செய்ய உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. இதை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
தமிழக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் தேர்தல் விளம்பரங்கள், சாலைகளின் ஓரங்களிலும், மலைகளில் பெயிண்ட் அடித்து விளம்பரம் செய்வது, மரங்களில் ஆனி அடித்து விளம்பர அட்டைகள் வைப்பது போன்றவற்றால் நிறைய பிரச்னைகள் ஏற்படுகிறது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், தமிழக அரசின் பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் பேனர்கள் மற்றும் விளம்பரத்திற்கு தடை விதித்தனர்.
அதோடு, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.