பானஜி:
கோவாவில் பொறுப்பேற்றுள்ள பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்ப கோருகிறது.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, அம்மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். இதனையடுத்து, மெஜாரிட்டியை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நடத்த முதல்வர் பிரமோத் சாவந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து கோவா ஆளுநர் மிருதுலா சின்ஹா நாளை காலை 11.30 மணி அளவில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
தோழமை கட்சிகளின் 3 எம்எல்ஏக்களையும் சேர்த்து, தங்களுக்கு 21 எம்எல்ஏகள் ஆதரவு இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
40 எம்எல்ஏக்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில் தற்போது 36 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு, பாஜக எம்எல்ஏ பிரான்ஸிஸ் டிசோசா ராஜினாமா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சுபாஷ் சிரோத்கர், தயாநந்த் சோப்டே ஆகியோரது ராஜினாமாவால் 4 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
14 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை கட்சியாக உள்ளது.