சென்னை:

னிமேல் பாலியல் புகார் தொடர்பாக பாதிக்கப்படும் பெண் பெயர் வெளியிடக்கூடாது என்று   தமிழக டிஜிபி டி.கே.ராஜேங்திரன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெஞ்சை  பதற வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக, பொள்ளாச்சி எஸ்.பி. பாண்டியராஜ், புகார் கொடுத்த பெண்ணின் பெயர் மற்றும் அவரது உறவினர்கள் குறித்து ஊடகங்களில் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே இதுபோன்ற விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரோ, புகைப்படமோ வெளியிடக்கூடாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில் டிஎஸ்பி பாண்டிய ராஜின் செயல் கடுமையான விமர்சனத்தை  ஏற்படுத்தியது. அதுபோல, தமிழக அரசு, இந்த வழக்கு தொடர்பாக சிபிஐக்கு விசாரணைக்கு உத்தரவிட்ட அரசாணையிலும்  பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவரது சகோதரர் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, அரசுக்கு குட்டு வைத்த நிலையில், டிஎஸ்பி பாண்டியராஜ் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அனைத்து காவல்துறைக்குக்கும் புதிய சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில்,  பொள்ளாச்சி கொடூரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் வெளியிட்டதைப்போல் இனி நடக்கக்கூடாது. போக்சோ, பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை- இந்த பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும் புகார்தாரரின் விவரங்களை வெளியிடக் கூடாது என எச்சரித்துள்ளார்.