சென்னை

பிரபல கிரிக்கெட் வீரர் மீண்டும் தமிழில் டிவிட்டர் பதிவு இட்டுள்ளார்

பிரபல கிரிக்கெட் வீரரான அர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவர் ஆவார். இவர் இந்த அணியால் ஏலம் எடுக்கப்பட்ட பிறகு பலமுறை டிவிட்டரில் தமிழில் பதிவிட்டு தமிழ் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அர்பஜன் சிங் கிரிக்கெட் விளையாட்டுக்கு உள்ள ரசிகர்களைப் போல் தமிழ் டிவிட்டுகளுக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். இவர் ஐபிஎல் தொடங்குவதை முன்னிட்டு மீண்டும் தமிழில் டிவிட்டரில் பதிந்துள்ளார்.

அர்பஜன் சிங் தனது டிவிட்டரில், “பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குரிய என்னருமை @ChennaiIPL ரசிகர்களே மீண்டும் @IPL ல் பங்கேற்க தங்க தமிழ் தேசத்திற்கு வந்து விட்டேன். ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான். அதே உணர்வுதான் என்னுள் இப்போது. #WhistilePodu@CSKFansofficial” என பதிந்துள்ளார்.

 

Thanx : Twitter