சென்னை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மெகா கூட்டணி அமைத்துள்ள திமுக கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டு உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில், திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியலை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.  தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில், கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடும் நிறைவடைந்தது

அதன்படி,  திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிளும் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய வற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் இறுதிப்பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

40 தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த தொகுதி களில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஒருசில நாட்களில், அந்தந்த கட்சிகள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


திமுக போட்டியிடும் 20 தொகுதிகள்

1) தென்சென்னை

2) வடசென்னை

3) மத்திய சென்னை, 

4) காஞ்சிபுரம்

5) ஸ்ரீபெரும்புதூர்

6) அரக்கோணம்

7) வேலூர்

8) சேலம்

9) திருவண்ணாமலை

10) கடலூர்

11) கள்ளக்குறிச்சி

12) தருமபுரி

13) நீலகிரி

14) பொள்ளாச்சி

15) தஞ்சாவூர் 

16) மயிலாடுதுறை

17) திண்டுக்கல்

18) தூத்துக்குடி

19) தென்காசி

20) திருநெல்வேலி

காங்கிரஸ் போட்டியிடும் 9+1=10 தொகுதிகள்

1) திருவள்ளூர்

2) கிருஷ்ணகிரி

3) ஆரணி

4) கரூர்

5) திருச்சி

6) சிவகங்கை

7) தேனி

8) விருதுநகர்

9) கன்னியாகுமாரி

10) புதுச்சேரி 

மதிமுக போட்டியிடும் தொகுதி

1) ஈரோடு

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்

1) விழுப்புரம்

2) சிதம்பரம்

இந்திய கம்யூனிஸ்டு போட்டியிடும் தொகுதிகள்

1) திருப்பூர்

2) நாகப்பட்டினம்

மார்க்சிய கம்யூனிஸ்டு போட்டியிடும் தொகுதிகள்

1) கோயம்புத்தூர்

2) மதுரை

இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே)

1) பெரம்பலூர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

1) இராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

1) நாமக்கல்