சென்னை:

தொகுதி இடைத்தேர்தல் வழக்கில்,எங்களை நிர்பந்திக்காதீர்கள் என்று  உச்சநீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இதை எதிர்த்து, 18 தொகுதிகளுடன் சேர்த்து விடுபட்ட 3 தொகுதிளுக்கும் தேர்தல் நடத்த  உத்தர விட வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் கடந்த 12ந்தேதி அவசர வழக்கு ‘ தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வசம் தாக்கல் செய்யப்பட்டது. அவரும், திமுக வழக்கை  அவசர வழக்காக  விசாரிப்பதாக அறிவித்திருந்தார்.

அதன்படி வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரவக்குறிச்சி  உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை பின்னர் நடத்துவதில் என்ன பிரச்னை என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியது

‘தேர்தல் ஆணையம் சார்பில், குறிப்பிட்ட 3 தொகுதிகளுகளின்  தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைக்கும்படி கோரியது.

இதற்கு  திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனால்  அதிருப்தி அடைந்த நீதிபதிகள் விரைந்து நடத்த எங்களை ஏன் நிர்பந்திக்கிறீர்கள்? 3 தொகுதி இடைத்தேர்தலை பின்னர் நடத்தினால் என்ன பிரச்சினை, எங்களை ஏன் நிர்பந்திக்கிறீர்கள், நாங்கள் விசாரணை நடத்த வேண்டாமா? எதிர்தரப்பு வாதத்தை கேட்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினர்.

3 தொகுதி இடைத்தேர்தல் குறித்து மார்ச் 25ந்தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை 25ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.