பங்கானா, இமாசல பிரதேசம்
மோடி அளித்த விவசாய உதவி நிதி ரூ. 2000 சில மணி நேரங்களில் திரும்ப பெறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு உதவி நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிவாரண நிதி மிகவும் குறைவாக இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த திட்டம் நடப்பு நிதி ஆண்டிலேயே தொடங்கப்படும் என அரசு அறிவித்து அந்த திட்டம் சென்ற மாதம்24 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.
பிரதமர் மோடியால் கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் முதல் தவணையாக விவசாயிகளின் வங்கிக் கனக்கில் ரூ. 2000 வரவு வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பினால் பல விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. இமாசால பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தில் உள்ள பங்கானா தாலுகாவில் உள்ள விவசாயிகள் இந்த பணத்தை பெற ஆர்வத்துடன் வங்கிகளுக்கு சென்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த ரூ. 2000 அன்றே அல்லது அடுத்த நாளே திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்த பணம் திரும்ப பெறப்பட்டதற்கான காரணம் குறித்து வங்கி நிர்வாகம் மற்றும் நிர்வாக அலுவலருக்கு எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இனிமேல் பணம் பெற உள்ள விவசாயிகளும் தங்களுக்கும் இதே நிலை ஏற்படும் என பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த தாலுகாவில் பல விவசாயிகளுக்கு இரண்டு ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ளதாகவும் அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களின் விண்ணப்பத்தை மீண்டும் சரி பார்க்கையில் இந்த விவரங்கள் கடறியபட்டதால் இந்த பணம் திரும்ப பெற்றுள்ளதாக கூறப்டுகிறது. ஆனால் இவை அனைத்தும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் ஆகும்.