சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், மேலும் 4 மாதம் கால அவகாசம் 4வது முறையாக வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்ககள் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், திடீரென டிசம்பர் 5 ம் தேதியன்று மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஓபிஎஸ் உள்பட அரசியல் கட்சியினர் கூறியதால், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு முதலில் 2 மாத கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது 4வது முறையாக ஆணையத்திற்கு மேலும் 4 மாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளதால், மேலும் 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.