ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி தலைவர் யாஷின் மாலிக்கை படைகள் மற்றும் மிரட்டல் மூலம் கைது செய்துள்ளது, பிரச்சினையை மேலும் மோசமாக்கும் என ஹுரியத் மாநாடு தலைவர் மிர்வாய்ஜ் உமர் ஃபாருக் எச்சரித்துள்ளார்.


காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீரில் இயங்கும் தீவிரவாத ஆதரவு இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி இயக்கத் தலைவர் யாஷின் மாலிக்கை ஜம்மு காஷ்மீர் போலீஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர்.

மேலும், ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் இயக்கத்தின் தலைவர் அப்துல் ஹமீது பயாஸ் உட்பட 24 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கைக்கு ஹுரியத் மாநாட்டு தலைவர் மிர்வாய்ஜ் ஃபாருக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

படைகள் மற்றும் மிரட்டல் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளால், நிலைமை மேலும் மோசமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.