டில்லி:
கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக, கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி முதல்வர், இரவு நேரத்தில் சாலையிலேயே படுத்து தூங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்து டிவிட் செய்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நாராயணசாமி கடந்த 3 நாட்களாக சாலையில் படுத்து தூங்கும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார். இது எந்த வகையான ஜனநாயகம்? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னர்கள் முன்பு தோற்கடிக்கப்பட வேண்டுமா? என்றும் காட்டமாக சாடியுள்ளார்.