திருமணம் ஆன 3வது நிமிடத்திலேயே மணப்பெண் விவாகரத்து பெற்ற சம்பவ குவைத்தில் நடந்துள்ளது. மணமகன் முட்டாள் என திட்டியதால் திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட மணமகள்.

marriage

மாறிவரும் காலக்கட்டத்தில் திருமணமான தம்பதியினர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் முறையிடுவது வாடிக்கையாகிவிட்டது. திருமணமான சில மாதங்களியே தம்பதியினர் விவாகரத்து கேட்பது பற்றி அனைவரும் கேள்வி பட்டிருப்போம். ஆனால் திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே மணமகள் விவாகரத்து பெற்ற சம்பவம் குவைத்தில் நடந்துள்ளது.

குவைத்தில் உள்ள நீதிமன்றத்தில் மணமக்கள் பதிவு திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். திருமணம் நீதிபதி முன்னிலையில் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த 3வது நிமிடத்திலேயே பேசிக்கொண்டிருந்த மணமக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உடனே மணமகளை முட்டாள் என மணமகன் திட்டியுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த அந்த மணமகள் திருமண பந்தத்தை முறித்து விவாகரத்து அளிக்கும்படி அங்கிருந்த நீதிபதியிடம் கேட்டுள்ளார்.

திருமணமான உடனே இதுபோன்று திட்டும் நபருடன் தான் வாழ விருப்பமில்லை எனவும், இறுதிவரை தனது வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது எனவும் மணமகள் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் திருமண பந்தம் முறிக்கப்பட்டு இருவருக்கும் விவாகரத்து அளிக்கப்பட்டது. திருமண மான 3 நிமிடத்தில் மணமகள் விவாகரத்து பெற்றது குவைத் வரலாற்றில் இதுவே முதல் முறை.

மணமகளின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.