இந்தோனேசியாவில் குற்ற வழக்கில் சிக்கிய ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக் கொள்வதற்காக அவரது கழுத்தில் பாம்பை சுற்றிவிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

indonasia

இந்தோனேசியாவில் செல்போன் திருடிய வழக்கில் வாலிபர் ஒருவரை பப்புபா போலீசார் கைது செய்தனர். திருட்டு வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. விசாரணைக்கு வாலிபர் ஒத்துழைப்பு அளிக்காததால், அவரை போலீசார் மிரட்டினர்.

மலைப்பாம்பு ஒன்றை அவரின் கழுத்தில் போட்டி சுற்றிவிட்டு மிரட்டிய போலீசார் செல்போன் திருடிய குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி வலியுறுத்தினர். குற்றவாளியை பாம்பு கொண்டு போலீசார் மிரட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகியதால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த போலீசார் மீது மனித உரிமைகள் ஆணையம் கண்டனத்தை
தெரிவித்தது.

இணையத்தில் வைரலான வீடியோவில், இளைஞரிடம் கேள்வி கேட்டு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதற்கு அவர் பதிலளிக்காததால், அதிகாரி ஒருவர் அந்த இளைஞரின் முகத்தின் முன்பு பாம்பினை கொண்டு சென்று பயமுறுத்திகிறார். மற்றுமொரு அதிகாரில், எத்தனை முறை செல்போனை திருடி இருக்கிறார் ? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த நபர் 2 முறை என பதிலளிக்கிறார். பாம்பை கழுத்தில் சுற்றியதால் பயந்த அந்த வாலிபர் கண்களை இருக்கமாக மூடிக் கொள்கிறார்.

விசாரணைக்கு அழைத்து அந்த நபரை போலீசார் சித்ரவதை செய்த சம்பவத்தை பலரும் கண்டித்த நிலையில், ஜெயவிஜயா தலைமை காவல் அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார்.