டில்லி
உடல் ஊனத்தை சுட்டிக் காட்டி தகுதியுள்ள ஒருவருக்கு நீதிபதி பதவி அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளதை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
உடல் ஊனமுற்றோருக்கு அரசு பல சலுகைகள் வழங்குவதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு எவ்வித உரிமையும் மறுக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் பல முறை தெரிவித்துள்ளது. இதை பல முறை நீதிமன்றம் உறுதியும் செய்துள்ளது.
கடந்த வருடம் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்ற ராகுல் பஜாஜுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் மேல் படிப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் பஜாஜ் பார்வைத் திறன் அற்றவர் ஆவார்.
அது மட்டுமின்றி டில்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு எஸ் கே ருங்க்தா என்பவர் மூத்த வழக்கறிஞர் என கவுரவிக்கப்பட்டார். அவர் பிறவியில்யே பார்வை இழந்தவர் ஆவார். அத்துடன் அவர் பல வழக்குகளில் அரசு வழக்கறிஞராகவும் பணி புரிந்துள்ளார்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த சுரேந்திர மோகன் என்னும் வழக்கறிஞர் நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு நீதிபதி பதவி வழங்கப்படவிலை. இதை ஒட்டி அவர் முறையீடு செய்துளார். இந்த முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் ஜோசப் கொண்ட அமர்வு சுரேந்திர மோகனுக்கு 70% பார்வைத் திறன் குறைவாக உள்ளதால் அவருக்கு நீதிபதி பதவி வழங்க இயலாது என தீர்ப்பளித்தனர்.
அத்துடன் ”நீதிமன்ற பணிகளில் அமர்த்தப்படுவோருக்கு பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவை இன்றியமையாதது ஆகும். ஆகவே குறைந்தது 50% க்கும் மேல் உள்ளவர்களுக்கு நீதித் துறையில் பணி புரிய அவசியமாகும். அதற்கு அதிகமாக குறை உள்ளவர்களை பதவியில் அமர்த்துவது நியாயம் அல்ல.” என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலரான நிபின் மல்கோத்ரா, “இந்த தீர்ப்பின் மூலம் ஊனமுற்றோரின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. .முன்பு மருத்துவக்கல்வி பயில ஊனமுற்றோருக்கு வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு கடந்த வருடம் பார்வை குறைவானோர், டிஸ்லெக்சியா, கேட்கும்திறன் குறைந்தோர் ஆகியோரும் மருத்துவக் கல்வி பயிலலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அப்படி இருக்க நீதிபதி பதவிக்கு பார்வைத் திறன் குறைவை காரணம் காட்டி வாய்ப்பு அலிக்காததது உச்சநீதிமன்றத்தின் தவறான முடிவாகும். இது எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து நான் விரைவில் மறுசீராய்வு மனு ஒன்றை அளிக்க உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.