சென்னை:
அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து கட்சியின் தலைமை அறிவிக்கும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்தல் கூட்டணி , தொகுதி பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக பணியாற்றி வருகின்றன.
அதிமுகவில் ஒருபுறம் தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடை பெற்று வரும் நிலையில் மற்றொரு புறம் 40 தொகுதிகளுக்கான வேட்புமனுக்களும் பெறப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பாஜக-அதிமுக நடுவே ஏறத்தாழ கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில்தான் இழுபறி நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, பாஜக உடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் என்றார்.
மேலும், தமிழகத்தில் மின் உற்பத்தி தேவைக்கு அதிகமாக இருப்பதால் கோடை காலத்திலும் மின்வெட்டு வராது என்றும் தெரிவித்தார்.