சென்னை:

மிழ்நாடு என்ற பெயரை தமிழில் இருப்பது போலவே ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என மாற்றும் அரசாணையை தமிழகஅரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் ஒரு வார்த்தையிலும், ஆங்கிலத்தில் வேறு பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகிறது. இதை ஒழுங்கும்படுத்தும் பணியை மே;றகொள்ள தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கை எடுத்து வந்தார்.

இதுவரை, மதுரை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட, 18 மாவட்ட கலெக்டர்கள், மாற்றப்பட உள்ள ஊர்ப் பெயர் பட்டியலை தமிழ் வளர்ச்சித் துறைக்கு அனுப்பி உள்ளனர்.

அதன்படி மாவட்ட நிர்வாகம், வருவாய், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ், ஆங்கில அறிஞர்கள் அடங்கிய குழு,மாற்று ஓசையுடன் உள்ள ஊர் பெயர்களை ஆராய்ந்து வந்தது. அதைத்தொடர்ந்து இதுபோன்ற பெயர்களுக்கு சமமான, ஆங்கில எழுத்து மற்றும் உச்சரிப்புடன் கூடிய பெயர்களை உருவாக்கியது.

இதுதொடெர்பாக ஆய்வுக் கூட்டம்,  தலைமைச் செயலகத்தில் நடை பெற்றது.  அதில் தமிழ் வளர்ச்சி நில அளவை பதிவேடுகள், வருவாய் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதில் ‘தமிழ்நாடு’ என்பதை ஆங்கிலத்திலும் ‘THAMIZH NADU’ என மாற்றும் வகையில் அரசாணை வெளியிட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.