பாட்னா

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடெங்கும் உள்ள அனைத்து விவசாயக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

நேற்று பீகர் ம்ச்ச்நிலம் பாட்னாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு மாபெரும் நடந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டார்.   காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற  பிறகு ராகுல் காந்தி கலந்துக் கொண்ட முதல்  பேரணி என்பதால் மக்கள் ஏராளமாக கூடி இருந்தனர்.    இந்த பேரணியில் அவருடன் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகெல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர்  பங்கேற்றனர்.

கங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், உள்ளிட்டோரும் பேரணியில் கலந்துக் கொண்டனர்.    பேரணியில் பேசிய ராகுல் காந்தி, “மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.   விவசாயிகளின் பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படும்.

உணவு உற்பத்தி துறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.    மோடி அரசில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இதற்கு நேர்மாறானவை.   அவர் அறிவித்த பயிர்காப்பீட்டு திட்டம் என்பது விவசாயிகளின் வருமானத்தை பறித்து அதை பெரும் தொழிலதிபர்களுக்கு அளிக்க கொண்டு வரப்பட்டது.

ஏழைகளுக்கு குறைந்த பட்ச ஊதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.   இது மோடி முன்பு சொன்ன வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்பது போன்ற பொய்யான வாக்கு றுதி அல்ல.   காங்கிரஸ் ஏற்கனவே வாக்களித்தபடி மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் கடன் தள்ளுபடி செய்து வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது. ” என தெரிவித்துள்ளார்.