புனே:
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டேவை மகாராஷ்டிர போலீசார் கைது செய்ததை புனே நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. அவரை உடனே விடுதலை செய்யுமாறு போலீசாருக்கு
உத்தரவிட்டது.
ஜனவரி 1-ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகான் பகுதிக்கு வருகை தர இருந்த பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் ,தலித் பிரிவினருக்கிடையே கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாகவும், சட்டவிரோதமாக கூடியதாகவும் ஆனந்த் டெல்டும்டே உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களை நகர்ப்புற நக்சலைட்டுகள் என்றும் குற்றம் சாட்டி வந்தனர் இந்நிலையில், பிப்ரவரி 11-ம் தேதி வரை டெல்டும்டேவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதற்கிடையே கீழ்நீதிமன்றத்தில் டெல்டும்டே முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில், போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறி புனே செஷன்ஸ் கோர்ட்டில் டெல்டும்டே யின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த கைது நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி , டெல்டும்டே
வை உடனே விடுதலை உத்தரவிட்டது.