டில்லி

ற்போது வெளியாகி உள்ள வாக்காளர் பட்டியலின் படி ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே ஆண்களை விட பெண்கள் தொகை குறைவாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் பெண் சிசுக் கொலைகள் அதிகரித்ததால் பெண்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் அதற்கு நேர்மாறாக உள்ளன.

நாடெங்கும் வெளியாகி உள்ள வாக்காளர் பட்டியலின் படி பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரிப்பு தற்போது வாக்களிக்கும் வயதை அடைந்துள்ள புதிய வாக்காளர்களால் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்ட்ரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் கேரளா, அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பெண் வாக்காளரகளை விட ஆண் வாக்காளர்கள் சிறிதளவே அதிகம் உள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு கணக்கோடு ஒப்பிடும் போது பெண்கள் விகிதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று வெளியான வாக்காளர் இறுதிப்பட்டியலின்படி 5.81 கோடி வாக்களர்கள் உள்ளனர். இதில் 2.98 கோடி பெண்களும் 2.92 கோடி ஆண்களும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 8.5% ஆண்களை விட பெண் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் படி கேரள மாநிலத்தில் பெண் வாக்காளர்கள் ஆண்களை விட அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.