ஸ்லாமாபாத்

முதன் முறையாக பாகிஸ்தான் நாட்டில் இந்துப்பெண் ஒருவர் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டில் இருந்து பல இந்துக்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்துவிட்டனர். தற்போது அங்கு அதிகபட்சமாக இஸ்லாமியர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். சுமர் 2%க்கும் குறைவான அளவில் மட்டுமே அங்கு இந்துக்கள் வசித்து வருகின்றனர்.

இதுவரை பாகிஸ்தானில் ஒரே ஒரு இந்து ஆண் நீதிபதி மட்டுமே பணியாற்றி உள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு ராணா பகவன் தாஸ் என்னும் இந்து ஒருவர் நீதிபதியாக பதவி ஏற்றார். அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக பணி ஆற்றினார். அதன்பிறகு இந்து மதத்தை சேர்ந்த யாரும் நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

பாகிஸ்தான் செய்தி பத்திரிகை ஒன்றில், “பாகிஸ்தான் நாட்டில் உள காம்பார் சாக்தாத் கோட் பகுதியை சேர்ந்த சுமன் குமார் பொதானி முதல் இந்துப் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஐதராபாத்தில் சட்டக் கல்வியையும் சட்டத்தின் பட்ட மேற்படிப்பை கராச்சியிலும் முடித்துள்ளார்.” என செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் இந்துப் பெ நீதிபதியான சுமன் குமாரியின் தந்தை கண் மருத்துவர் ஆவார். சுமன் குமாரியின் அக்கா மென்பொருள் பொறியாளராகவும் தங்கை பட்டய கணக்காளராகவும் பணி புரிகின்றனர். அவர் தனது சொந்த மாவட்டத்தில் நீதிபதியாக பொறுப்பு ஏற்கிறார், சுமன் குமாரிக்கும் பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.