சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடியை குற்றம்சாட்டி, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மேத்யூ சாமுவேல் மீது வழக்கு பதியப்பட்டது.
இதை எதிர்த்து, மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த வழக்கில், கொடநாடு விவகாரத்தில் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை தடை விதித்தது நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவரது கொட நாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார். கொடநாடு எஸ்டேட் பணியாளரான சயன் ஒரு விபத்தில் சிக்கி தப்பினார். ஆனால், அவரது குடும்பத்தினர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவங்கள் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், பின்னர் அப்படியே அமுங்கி போனது.
இதுகுறித்து தெஹல்கா இணையதள பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யு சாமுவேல், ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில், கொடநாடு கொள்ளை மற்றும் கொலை பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக கூறப்பட்டது.. இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து தனது பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த ஆவணப்படம் திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மேத்யு, சயன், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்த காவல்துறை முடிவெடுத்தது.
இந்த நிலையில், வழக்கின் விசாரணைக்கு தடை கேட்டு மேத்யூ சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதி மன்றம், கொடநாடு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் மேத்யூ சாமுவேல் மீது மத்திய குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு 4 வார கால தடை விதித்துள்ளது.