டில்லி:

யிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடியில் பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு (2018) நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு, போராட்டத்தின் போது காவல் துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மாணவி உள்பட  13 நபர்கள் கொல்லப்பட்டனர்.

இதன் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பை தொடர்ந்து,  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு, ஆலைக்கு  சீல் வைக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பாக தேசிய பசுமை தீர்ப்பா யத்தில் வழக்கு தொடர்ந்தது. பசுமை தீர்ப்பாயம் இதுகுறித்து விசாரிக்க  நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தியது. பின்னர் அதன் அறிக்கையைக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்ததை எதிர்த்து அரசின் சார்பாக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், மேல்முறை யீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தீர்ப்பு வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்துள்ளது. உடனே மின்சாரம் வழங்கவும் தீர்ப்பு கூறியது.

இந்த நிலையில், இன்று ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.