ஜாகர்தா

னமழையால் இந்தோனேசியாவில். 8 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில்  ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.

நேற்று இரவு முதல் இந்தோனேசியாவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென் சுலவேசி பகுதியில் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோவாஸ் மாவட்டம் நிலச்சரிவால் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.

தென் கலோசியில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரண்டு பாலங்கள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நில்ச்சரிவு மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து அடியோடு நின்று போனது. நேற்று வரை பெய்த மழையால் இதுவரை 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மேலும் பலர் காணவில்லை என தெரிவிப்பதால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெள்ள்ம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேசிய நாட்டு பேரிட்ர் தடுப்பு அமைப்பு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.  மழை இன்றும் தொடர்வதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளன்ர்.