வாரணாசி

வாரணாசியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்ட நிகழ்வில் ஒரு பசு உள்ளே புகுந்துள்ளது.

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் நேற்று வெளிநாடு வாழ் இந்தியர்களின் 15 ஆம் மாநாடு தொடங்கியது. இந்த விழாவில் பிரதம்ர் மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவீண் ஜகன்னாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மொரிஷியஸ் பிரதமருடன் மோடியும் அமைச்சர்களும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தின்ர்.

இந்த விழாவின் போது அதே சாலையில் ஒரு பசு ஒன்று கவனிப்பாரன்று திரிந்துக் கொண்டிருண்டது. அந்தப் பசு திடிரேன மாநாடு வளாகத்தினுள் நுழைந்தது. இது அந்த வளாகத்தில் கடும் பரப்ரபை ஏற்படுத்தி உள்ளது. உள்ளே நுழைந்த அந்த பசு வேகமாக மேடையை நோக்கி முன்னேறியது.

இதைக் கண்ட காவலர்கள் அந்தப் பசுவை விரட்டி உள்ளனர். இந்த நிகழ்வு வீடியோ பதிவாக்கபட்டு சமூக தளங்களில் பதியப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை கண்ட சிலர் தங்கள் பின்னூட்டத்தில் பசுவும் இட ஒதுக்கீடு கோரி மோடியை சந்திக்க உள்ளே புகுந்து இருக்கலாம் எனவும் அந்த பசுவுக்கு பிரதமர் அளித்த விருதைப் பெற வந்த போது அதை காவலர்க்ள் தடுத்தனர் எனவும் கிண்டல் செய்துள்ளனர்.