கொல்கத்தா:

கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தானால் செய்ய முடியாததை, 5 ஆண்டுகளில் மோடியும் அமீத்ஷாவும் செய்துவிட்டனர் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமரிசித்துள்ளார்.


கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய மோடிக்கு எதிரான எதிர்கட்சிகளின் மெகா பேரணியில் பங்கேற்றுப் பேசிய கெஜ்ரிவால், கடந்த 70 ஆண்டுகளில் நம் நாட்டை பாகிஸ்தான் பிளவுபடுத்தவில்லை. ஆனால், பிரதமர் மோடியும்,அமீத்ஷாவும் அதனை 5 ஆண்டுகளில் செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிராக  மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும் நபர்களை பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் தொடர்கிறார்.

நம் நாட்டை துண்டாட வேண்டும் என்பது பாகிஸ்தானின் கனவு. ஆனால் பாஜக அரசு நம் நாட்டை மக்களிடையே மோதலை உருவாக்கியும், மதம், மொழி என்றும் நாட்டை பிளவு படுத்துகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்றார்.

[youtube-feed feed=1]