டில்லி:

ச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா அவசரம் அவசரமாக தூக்கியடிக்கப்பட்டது ஏன் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி வருகிறது.

பிரதமர் மோடியின் செயலாளராக இருக்கும் பாஸ்கர் குல்பே (Bhaskar Khulbe)  மீதான நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கில், அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய அலோக் வர்மா உத்தர விட்ட நிலையில், அவரை அதிரடியாக மாற்றி உள்ளது மத்திய அரசு.

சிபிஐ இயக்குனர்களுக்கிடையே நடைபெற்று வந்த மோதலை தொடர்ந்து சிபிஐ இயக்குனர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதையடுத்து சிபிஐ ஆணையராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், அலோக் வரமா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து  தொடர்ந்த வழக்கில், அலோக்வர்மா சிபிஐ இயக்குனராக தொடரலாம் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், அஸ்தானா புகாரின் பேரில் 4 சிபிஐ முக்கிய அதிகாரிகளை இடம் மாற்று செய்த நாகேஸ்வரராவ் உத்தவை சிபிஐ இயக்குனர்அலோக் வர்மா ரத்து செய்தார்.

அத்துடன் ஏற்கனவே அவர் விசாரித்து வந்த மேற்கு வங்க நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான விசாரணையில், மோடியின் செயலாளராக உள்ள பாஸ்கர் குல்பே மீதான புகாருக்கு ஆதாரம் இருந்த நிலையில், அவர்மீதும்  குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதை தெரிந்துகொண்ட மத்திய அரசு அவரை அதிரடியாக இட மாற்றம் செய்தது.

உச்சநீதி மன்றம் அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக பதவியை தொடரலாம் என்று உத்தரவிட்டு, இதுகுறித்து முடிவு எடுக்க தேர்வு குழுவுக்கு ஒரு வார கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில், சுமார் 72 நாட்களாக கட்டாய ஓய்வில் இருந்த அலோக் வர்மா மீது 72 மணி நேரத்திற் குள்ளாக மோடி அரசு நடவடிக்கை எடுத்தது பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

அலோக் வர்மா இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

இதற்கிடையில் மீண்டும் பொறுப்பு இயக்குனராக அமர்ந்த நாகேஸ்வரராவ், அலோக் வர்மாவின் உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். நிலக்கரி ஊழல் வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் மறுத்து விட்டது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாகேஸ்வர ராவின் நடவடிக்கை  ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல  மத்தியஅரசின் தலையீட்டை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

ஏற்கனவே உச்சநீதி மன்றம் நியமித்த நீதிபதி பட்நாயக் விசாரணை அறிக்கையில், வர்மா மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அஸ்தானா, வர்மா மீது கூறிய புகார் குறித்த அறிக்கையில் அஸ்தானா தன்முன்பு கையெழுத்திட வில்லை என்று சிவிசி குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த பாஸ்கர் கும்பளே?

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வந்த நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரியான  பாஸ்கர் கும்பள. இவர் தற்போது பிரதமர் மோடியின் செயலாளராக இருந்து வருகிறார்.

இவர் மேற்கு வங்க அரசின் ஆலோசகராக இருந்து வந்தபோது, அந்த மாநிலத்தில் நடைபெற்று வந்த மிகப்பெரிய  நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இது குறித்து விசாரித்து வந்த அலோக் வர்மான தலைமையிலான சிபிஐ  காவல்துறையினர், முன்னாள் யூனியன் நிலக்கரிச் செயலாளர் எச்.சி.குப்தாவுடன் ஊழலுடன் பாஸ்கர் கும்பளே வுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தது. மேற்கு வங்கத்தின் மோயிரா-மாதூஜோரில் உள்ள ரம்சுருப் லோகே உத்யோக் லிமிடெட் நிறுவனத்திற்கு நிலக்கரித் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டத்தில் பாஸ்கர் குல்பே பலன் அடைந்ததாக கூறப்படுகிறது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ 40 வழக்குகளை விசாரித்து வந்த சிபிஐ, அதுகுறித்து 2014ம் ஆண்டு  குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தது. அதைத்தொடர்ந்து இதுகுறித்து சிறப்புநீதி மன்றம் அமைக்கப்பட்டுவிசாரணை நடைபெற்று வந்த நிலையில், குப்தாவுக்கு தடுப்புச் சட்டத்தின் கீழ்சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த நிலக்கரி ஊழல் தொடர்பான ஊழல் முறைகேட்டில், மேற்கு வங்காள  ஐ.ஏ.எஸ் பாஸ்கர் குல்பே மீதான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிய அலோக் வர்மா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்தே வர்மா மாற்றப்பட்டுள்ளார்.