டில்லி:
இந்திய வந்துள்ள மலேசிய முன்னாள் துணைபிரதமர் அன்வர் இப்ராகிம் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களும் ஒருவருக் கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார் மலேசிய முன்னாள் துணைபிரதமர் டத்தோ செரி அன்வர் இப்ராகிம். அவருடன் மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 பேரும் வந்துள்ளனர்.
இந்திய பிரதமர் உள்பட பலரை சந்திக்க உள்ள அன்வர் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு மேலும் வலுப்படுத்தும் வகையில் பேச்சு வார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது
கர்நாடகாவில் நடைபெற உள்ள இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் இந்தியா வந்துள்ள அன்வர், கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் சந்தித்து பேச இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து இந்திய தொழிலதிபர்களை சந்தித்து உரையாட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.
2018ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மலேசியா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மகாதீர் முகமது-அன்வர் இப்ராஹிம் ஆகியோரின் கட்சிகள் அமைத்த கூட்டணி பெருவெற்றி பெற்றது. இத்தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கட்சி தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து, மகாதீர் முகமது மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்ட நிலையில், , ஊழல் குற்றச்சாட்டு காரண மாக சிறையில் இருந்த முன்னாள் துணைபிரதமர் அன்வர் இப்ராகிம் விடுதலை செய்யப்பட்டார்.
அதையடுத்து, போர்ட் ரிக்சன் நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட அன்வ மாபெரும் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து, பிரதமர் பதவியை அன்வரிடம் ஒப்படைக்க மகாதீர் முகமது முடிவு செய்துள்ளார். விரைவில் அன்வர் மலேசிய பிரதமராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.