திஷ்பூர்:
அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா உடனான உறவை முறித்துக்கொள்வதாக கூட்டணி கட்சியான அசாம் கன பரிஷத் அறிவித்து உள்ளது.
அசாம் மாநிலத்தில் அசாம் கன பரிஷத் கூட்டணியுடன் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக சர்பானந்தா சோனாவால் இருந்து வருகிறார். இந்தநிலையில் மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா காரணமாக பாரதியஜனதாவுக்கும் கூட்டணி கட்சியான அசாம் கன பரிஷத் கட்சிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்வதாக அசாம் கன பரிஷத் தலைவர் பிரஃபுல்லா மகந்தா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் பாஜக அமைச்சரவையில் அசாம் கன பரிஷத் கட்சியினரும் பங்கேற்றுள்ள நிலையில், குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் எழுந்தது.
இந்த நிலையில், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்த எங்கள் கருத்தை நாங்கள் சட்டப்பேரவை யில் தெரிவித்துள்ளோம் என கூறிய அசாம் கன பரிஷத், பஞ்சாயத்து தேர்தல்களில் இரு கட்சியினரும் தனித்து போட்டியிட்டனர்.
இதற்கிடையில் சமீபத்தில் பிரதமர் மோடியும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறை வேற்றுவோம் என்றும் அறிவித்திருந்தார். இதன் காரணமாக அசாம் உள்பட சில மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்வதாக அசாம் கன பரிஷத் கட்சி தலைவர் பிரபுல்லா மகந்தா அறிவித்து உள்ளார்.