டில்லி:
ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்வாக விவாதிக்க கோரி எம்.பி.க்கள் பாராளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது. அதுபோல மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்ட்டு உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து கடந்த ஆண்டு (2018) டிசம்பர் 11ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பெரும்பாலான நாட்கள் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக முடங்கி உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் உள்ப 23 சட்டமுன்வடிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை முடங்கி வருகிறது.
ஏற்கனவே மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களை 5 நாட்கள் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடியதும் இரு அவைகளிலும் ரஃபேல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக முத்தலாக் மசோதா பாராளுமன்ற ராஜ்யசபாவில் நிறைவேறுவதில் சிக்கில் நீடித்து வருகிறது.