பம்பை:
சபரிமலை கோவிலுக்குள் 50வயதுக்கும் குறைவாக உடைய 2 பெண்கள் நுழைந்தனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்து உள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்திற்குள் இன்று அதிகாலை 2 பெண்கள் நுழைந்த னர்.அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதையடுத்து, கோவில் நடை மூடப்பட்டது.
இந்த நிலையில் கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்தனர் என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
சுமார் 40வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்திற்குள் சென்று அய்யப்பனை தரிசித்தனர். அவர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஏற்கனபே பெண்கள் செல்ல கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில், bபண்களுக்கு மப்டி உடை அணிந்த காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கியதாகவும், அதைத்தொடர்ந்து அவர்கள் கோவிலுக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.
கோலியான்டி பகுதியை சேர்ந்த பிந்து (வயது 42) மற்றும் மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரத்தை சேர்ந்த கனகதுர்கா (வயது 44) ஆகிய இரு பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர் என்றும் கூறி உள்ளார்.
“பொதுவாக, காவல்துறையினர் கோயிலுக்குள் செல்ல விரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பை அளிப்பார்கள், நான் முன்னர் அதை தெளிவுபடுத்தியுள்ளேன்.” நேற்று மாநிலம் முழுவதும் கோவிலுக்குள் செல்ல ஆதரவு அளித்து 30 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டம் மூலம் ஆதரவு தெரிவித்தாகவும் கூறினார்.
இந்த நிலையில் கோவிலுக்குள்ள செல்ல 2 பெண்கள் முன்வந்ததாகவும், அவர்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளித்தனர் என்றும் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்கள் சன்னிதானத்திற்குள் நுழையும் வீடியோ…
இதுகுறித்து கூறிய கேரள சட்ட அமைச்சர் ஏ.கே.பாலன், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும், நாங்கள் செய்ய நினைத்தால், அதை அமைதியாக செய்ய மாட்டோம் என்றவர், இரண்டு பெண்களும் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களுக்கு நாங்கள் காவல்துறை மூலம் பாதுகாப்பு அளித்தோம் என்று கூறி உள்ளார்.