பம்பை:

பரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்திற்குள் கடும் எதிர்ப்புகளையும் மீறி 2   பெண்கள் நுழைந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து கோவில் நடை மூடப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.  பெண்கள் சன்னிதானத்திற்குள் நுழையும் வீடியோ வைரலாகி வருகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள்  பெண்களை அனுமதிக்க உச்சநீதி மன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அய்யப்ப பக்தர்களும், பந்தளம் அரசு மற்றுத் கோவில் தந்திரிகள் பெண்களை அனுமதிக்க மறுத்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் பாஜக உள்பட இந்து அமைப்புகள் உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அய்யப்பன் கோவில் சன்னிதானம் வரை வந்த பெண்கள்

இதற்கிடையில் பல முறை சில பெண்கள் கோவிலுக்கு வர முயன்று, அவர்களால் பக்தர்களால் திருப்பி அனுப்பட்ட நிலையில், இன்று அதிகாலை காவல்துறையினர் பாதுகாப்புடன் 2 பெண்கள், ஆண்கள் போன உடையணிந்து  கோவிலின் பின் வாசல் வழியாக கோவில் சன்னிதானம் வரை வந்ததாக கூறப்படுகிறது.

பிந்து மற்றும் கனக துர்கா ஆகிய இரண்டு பெண்கள்  இன்று அதிகாலை 3.45 மணியளவில் சன்னிதானம் வரை வந்து அய்யப்பனை தரிசனம் செய்ததாகவும், ஆனால் அவர்கள் 18ம் படி ஏற பக்தர்கள் மறுத்துவிட்ட நிலையில், சன்னிதானத்தில் இருந்து அவர்கள் திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து  அய்யப்பன் கோவில் நடை மூடப்பட்டது. தொடர்ந்து பரிகார பூஜைகள் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று  வருவதாகவும்,  பரிகார பூஜை முடிந்த பிறகு கோவில் சன்னிதானம் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இது கேரளவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள் சன்னிதானத்திற்குள் நுழையும் வீடியோ…