
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர் நடிகர் ரஜினிகாந்த் என்று ன பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்; சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் பாமர மக்களா? அல்லது தீவிரவாதிகளா? என்ற விவரம் தெரியவேண்டும் என்றார்.
மேலும், “கூடங்குளம் உள்பட தமிழகத்தில் பல போராட்டங்களின் பின்னணியில் தீவிரவாதிகள் இருந்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாதவர் ரஜினி. இன்று ஒரு கருத்து நாளை ஒரு கருத்து என தமது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்” என்று குற்றம் சாட்டினார்.
Patrikai.com official YouTube Channel