ராஞ்சி:
ஜார்கண்ட் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீதா குப்தா என்பவர் இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நர்சுகளை தாக்கியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 350 நர்சுகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சை கிடைக்காமல் 1,400 நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர். அதோடு அவசர சிகிச்சை கிடைக்காமல் 8 நோயாளிகள் இறந்துவிட்டதாக டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.
மருத்துவமனை இயக்குநர் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘‘முழு விவகாரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறோம்’’ என்றார். போராட்டம் காரணமாக நோயாளிகள் மரணமடைந்தது குறித்து பதலிளிக்க மறுத்துவிட்டார்.