பெங்களூரு:

டந்த 28ந்தேதி நடைபெற்ற கர்நாடக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவின் ஆர்.ஆர்.நகர் சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ராஜஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா 6வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் 32,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

நாடு முழுவதும் காலியாக இருந்த 4 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும்  11 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், ராஜராஜேஸ்வரி நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்  6வது சுற்று முடிவில் 32 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று, தனது வெற்றியை உறுதி செய்து வருகிறார்.

பஞ்சாப் சாக்கோட் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரட்டி ஷெரோவாலியா 1200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

கேரளாவில், செங்கானனூர் தொகுதி இடைத்தேர்தலில்  கம்யூனிஸ்டு வேட்பாளர் 3016 வாக்குகள் முன்னிலை பெற்று வருகிறார்.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் துலால் சந்திரா தாஸ் 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று உள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள பல்கார் லோக்சபா  தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் கவித் ராஜேந்திரா தென்யா 10 ஆயிரம் வாக்குகள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளரை விட பெற்று  முன்னிலையில் உள்ளார்.

மற்றொரு சட்டமன்ற தொகுதிய தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் பந்தாரா கோன்டியா 3100 வாக்குகள் பெற்று முதலிடத்தில் வருகிறார்.