தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையத்தின் குழு இன்று தூத்துக்குடி வருகிறது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.   இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

டில்லி உயர்நீதிமன்றம் இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை செய்ய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டது.    ஆணையம் விசாரணைக்காக தூத்துக்குடிக்கு 4 பேர் கொண்ட குழு ஒன்றை இன்ரு அனுப்பி விசாரணை செய்ய உள்ளது.   இந்தக் குழுவில் இணைக் கண்காளிப்பாளர் மற்றும் ஆய்வாளர்கள் இடம் பெற்றுளனர்.

இன்று முதல் விசாரணையை தொடங்கும் இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை இன்னும் இருவாரத்தில் தாக்கல் செய்யும் என ஆணையம் அறிவித்துள்ளது.