புவனேஸ்வர்:
ஒடிசாவில் பிஜூ ஜனதா தள கட்சி ஆட்சி செய்து வருகிறது. இக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக இருந்து வருகிறார். பிஜூ ஜனதா தளம், பாஜக.வுடன் கூட்டணியில் உள்ளது.
இந்நிலையில் பாஜக.வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பிஜூ ஜனதா தளத்தின் கேந்திரபடா தொகுதி எம்.பி பய்ஜெயந்த் ஜெய் பாண்டாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து நவீன் பட் நாயக் நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து அவர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி தனது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு இன்று அனுப்பியுள்ளார். கட்சி தன்னை அவமானப்படுத்தி விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும் மக்களவை தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.