ராஜஸ்தான் பில்வாராவின் ரைசிங் புராவின் காடுகளில் கடுமையான வெப்பம் காரணமாக 11 மயில்கள் பலியாகியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாராவின் ரைசிங் புராவின் காட்டுப்பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில், அரியவகை பறவைகள் மற்றும் விளங்குகள் வாழ்ந்து வருகின்றன.
வடமாநிலங்களில் கடுமையான வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து, அனல் கற்றுவீசி வருகிறது.
இந்த வெப்பக்காற்றால் மனிதர்கள் மட்டுமின்றி மயில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரைசிங்புரா காட்டுப்பகுதியில் இதுவரை 11 மயில்கள் கடுமையான வெப்பத்தை தாங்கமுடியாமல் பலியாகிவிட்டன.
மேலும் பல மயில்கள் மயக்கமடைந்து வருகின்றன. வனத் துறையின் கால்நடை அதிகாரிகள் மற்றும் ரேஞ்சர்ஸ் மேலும் மயக்க நிலையில் இருந்த இரண்டு மயில்களை காப்பாற்றி சிகிச்சையளித்து வருகின்றனர்.