ஸ்ரீநகர்;

காஷ்மீர் எல்லைப்பகதியில்,  ஊடுருவ முயன்ற 5 பயங்கவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் உதவியுடன் பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். இதை இந்திய எல்லையோர பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி தடுத்து வருகின்றனர்.

இன்று அதிகாலையில் குப்வாரா மாவட்டத்தின்  எல்லை பகுதியான  தங்தார்  கிராமத்தை ஒட்டிய வனப்பகுதி வழியாக, பயங்கரவாதிகள் ஒரு பிரிவினர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதை கண்டறிந்த ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற 2 மணி நேர தாக்குதலில், 5 பயங்கவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். அதைத்தொடர்ந்து வேறு பயங்கரவாதிகள் யாரும் தங்தார் பகுதியில் ஊடுருவி உள்ளனரா என ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.