பெங்களூர்:
கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா வெளிநடப்பு செய்தார்.
கர்நாடகாவில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி, இன்று பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் கர்நாடக சட்டமன்றம் இன்று கூடியது.
இன்று காலை சபை கூடியதும், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து மதிய இடைவேளைக்கு பிறகு முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.
அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து பேசினார். மேலும், வரும் 28ந்தேதி மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்போவதாக கூறி, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தனது கட்சி உறுப்பினர்களுடன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.