தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று பல்லாயிரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால், 12 பேர் பலியானார்கள்.

இந்த வன்முறை குறித்து தமிழகம் முழுவதும் தலைவர்களும், திரைத்துறையினரும் கண்டன குரல்கள் எழுப்பினர். பொது மக்களும் சமூகவலைதளங்களில் தங்கள் கண்டனங்களை பதிந்தனர்.

 

ஷங்கர் நீக்கிய பதிவு

இந்த நிலையில் நேற்று மாலை திரைப்பட இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி குறித்து பதிவிட்டிருந்தார். இது நெட்டிசன்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழகமே ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களை குறித்து கண்டனம் தெரிவித்துக்கொண்டிருந்த  நிலையில் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர், கிரிக்கெட் குறித்து பதிவிடுவதா?
தன்னுடைய படங்களில் மட்டும் சமுதாயக் கருத்துகளை இடம் பெறச் செய்யும் குடிதனஇ பெரும்  சோக சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்காமல் ஐ.பி.எல் குறித்து சிலாகித்து ட்வீட் போடுகிறாரே என்று பலரும் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.

 

வருத்த பதிவு

 

இதையடுத்து ஷங்கர் அந்த பதிவை நீக்கினார். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் இறந்தவர்களுக்கு தனது இரங்கல் பதிவை இன்று காலை பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]