
தூத்துக்குடி:
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் பொதுமக்கள் இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகயிட ஊர்வலமாக சென்றனர்.
அவர்களை தடுத்து கலைத்து செல்ல செல்ல கூறிய போலீசார், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் அவர்கள்மீது தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது, ஒரு தரப்பினர் போலீசார் மீது கற்களை வீசியதால் போராட்டம் களேபரமாக மாறியது.
போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். போலீசாரின் தடியடி காரணமாக பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் 100 நாட்களையும் கடந்து போராடி வருகின்றனர். மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று பொதுமக்கள் பேரணியக சென்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட முயன்றனர்.

இன்றைய போராட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள், வணிகர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டு தூத்துக்கடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
ஆனால் அவர்கள் ஆட்சியரகத்துக்கு ஒரு கி.மீ. முன்னதாக மடத்துக்குளம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். மக்கள் மதுரை- தூத்துகுடி புறவழி சாலையை பொதுமக்கள் நெருங்க முடியாத வகையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் பேரணி சென்றால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர்.
இதற்கிடையில், பனியமாதா ஆலயத்தில் இருந்து மீனவர்கள் பேரணியாக சென்று அங்கே ஒரு போராட்டத்தை யும் நடத்தி வருகின்றனர். போலீஸ் வாகனத்தை கீழே தள்ளி பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து போலீஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் ஒரு பகுதி போலீஸார் ஓட்டம் பிடித்தனர்
அலை அலையாக மக்கள் பேரணியில் பங்கேற்று வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் போராட்டக்காரர்கள் நுழைந்து வருகின்றனர். போலீஸ் கைது முயற்சியை முறியடித்து மக்கள் பேரணி தொடர்ந்து வருகிறது.
மாணவ மாணவிகள், இளைஞர்கள், முதியவர்கள், பிஞ்சு குழந்தைகள், பெண்கள்,மாற்றுத் திறனாளிகள் என பல்லாயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கீதாஜீவன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.
144 தடை உத்தரவை மீறி 15 கிமீ பேரணி பொதுமக்கள் நடத்தினர். இதையடுத்து மற்ற பகுதியில் ஒன்று திரண்ட போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளையில் போராட்டக்குழுவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி முழுவதும் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட்டை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மக்கள் போராட்டம் மற்றும் பேரணி காரணமாக தூத்துக்குடி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
[youtube-feed feed=1]