டில்லி:

ய்வூதியம் பெற மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று  மத்திய  அரசு தெரிவித்துள்ளது.

டில்லியில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில் பேசிய  மத்திய அரசு அதிகாரிகளுக்கான இணை அமைச்சர்  ஜிதேந்திரா சிங் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.

மேலும் தற்போதைய தொழில்நுட்ப வசதிகளின்படி,  வங்கிகளுக்கு செல்லும் அவசியம் இல்லை என்றும்,  சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு போன்ற கூடுதல் வசதிக்காக ஆதார் அட்டை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் ஓய்வூதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்றும், இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள  48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61.17 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]