பெங்களூரு:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் சிகரிபுரா தொகுதியில் போட்டியிட்ட பாரதியஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியை முன்னிட்டு எடியூரப்பா இன்று டில்லி புறப்பட்டு செல்கிறார்.
கர்நாடகாவில் கடந்த 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையிலில், கர்நாடகவின சிகரிபுரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும், மாநில பாஜ தலைவருமான எடியூரப்பா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 35,397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தொகுதியில் எடியூரப்பா, 86,983 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோனி மலடேஷா 51,586 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக 35,397 வாக்குகள் வித்தியாசத்தில் எடியூரப்பா வெற்றி பெற்று ஆட்சி பிடித்துள்ளார்.