
ஜெருசலேம்
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறந்ததற்கு பாலஸ்தீனியர்கள் எதிர்த்து எல்லை தாண்டி வந்து போராட்டம் நடத்தி உள்ளனர்
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறந்து வைக்கப்பட்டது. பிரம்மாண்டமாக நடந்த இந்த விழவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சார்பில் அவரது மகளும் மருமகனும் சென்றனர். ஆனால் டிரம்ப் செல்லவில்லை. அதை ஒட்டி அவர் பேசிய காணொளிக் காட்சி திரையிடப்பட்டது.
காஸாவில் நடந்து வரும் மோதல்களில் குறைந்தது 43 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர். இந்நிலையில் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகத் திறப்பு விழா உற்சாகமாக கொண்டாடுவதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்களில் சிலர் பாலஸ்தீனிய எல்லை தாண்டி வந்து அமெரிக்காவுக்கு எதிராக ஜெருசலேம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலிய ராணுவத்தினரும் காவல்துறையினரும் அவர்களை தடுத்து திருப்பி அனுப்பி உள்ளனர்.
[youtube-feed feed=1]