கெய்ரோ:

ஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்துக்கு சொந்தக் காரர்கள்  இஸ்லாமியர்களின்  என்றும்   அல்கொய்தா தலைவர் அய்மான் அல் ஷவாரி தெரிவித்து உள்ளார்.

அக்கொய்தா தலைவர் அல்ஷவாரி இதுகுறித்து நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த ஒளிநாடாவில், ஒளிநாடாவில், இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிட் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான இடம் என்றும், ஆனால், அமெரிக்கா இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ்-ல் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த ஒளிநாடா சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இஸ்ரேலின் தலைநகராக  டெல்அவிவ் உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், . அமெரிக்க தூதரகத்தை இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் பகுதியில் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றி ஜெருசலேமை புதிய தலைநகராக அறிவிக்கும் என்று  ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார்.

இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கக் கூடாது என்று 21 நாடுகளை சேர்ந்த அரபு கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும்,  மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளின் அமைதிக்கு மையப்புள்ளியாக ஜெருசலேம் இருப்பதால், அமெரிக்க அதிபரின்  இந்த முடிவு அமைதியை அழித்துவிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் அக்கொய்தா, டெல்அவிவ் இஸ்லாமையர்களுக்கு சொந்தமான இடம் என்று அறிவித்து உள்ளது.

[youtube-feed feed=1]