ஜெருசலேம்:

ஜெருசலேமில் நாளை அமெரிக்காவின் புதிய தூதரகள் திறக்கப்படுகிறது. இந்த விழவில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் இவரது கணவர் ஜாரேத் குஷ்னர் ஆகியோர் ஜெருசலேம் வந்து சேர்ந்தனர்.

டிரம்ப் சார்பில் இவர்கள் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை என்பது உறுதியானது.

1967ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போரின் போது கிழக்கு ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் ஆக்ரமித்தாக பாலஸ்தீனியம் குற்றம் சாட்டி வருகிறது. ஜெருசலேமை தலைநகராக இஸ்ரேல் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த பிரச்னைக்கு இடையில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை டிரம்ப் அங்கிகரித்தார்.

அங்கு அமெரிக்காவின் தூதரகம் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிரம்பின் இந்த நடவடிக்கையால் அவர் மீது பாலஸ்தீனியர்கள் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் தான் டிரம்ப் அறிவித்தபடி ஜெருசலேமில் அமெரிக்காவின் தூதரகம் நாளை திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.