சென்னை :

நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்கு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவனக் காப்பம் தெரிவித்து உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை  300% அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில்  அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து  தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ள விவர பட்டியலில், தமிழகத்தில் கடந்த  2011ம் ஆண்டு பெண் குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 2016ம் ஆண்டு விவரப்படி 1,169 வழக்குகள் சிறுமிகள் வன்கொடுமை குறித்து பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடந்த ஆண்டுகளில்  331% உயர்ந்துள்ளதாக கூறி உள்ளது.

. அதேபோல பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2011ம் ஆண்டு 925 ஆக இருந்து 2016ம் ஆண்டு 2,856 ஆக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

2016ம் ஆண்டில் பதிவாகியுள்ள 2,856 வழக்குகளிலும் 41% பாலியல் வன்கொடுமை வழக்குகள் 15% பாலியல் தொந்தரவு வழக்குகள் என்றும் அந்த பட்டியலில் தெரிவிக்குப்பட்டுள்ளது.

இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் பெரும்பாலும் அந்த பெண் குழந்தைகளின் உறவினர்களாலேயே நிகழ்த்தப்படுவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.