நாமக்கல்:

பெட்ரோல், டீசல் தினசரி விலை உயர்வை நிறுத்தக்கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 17தேதி நடைபெற்ற உள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்துபேசி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ந்தேதி முதல் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் சர்வதேச சந்தையின் விலைக்கு ஏற்ப மாற்றி வைக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

இதற்கு தொடக்கத்தில் பெட்ரோல் விற்பனை நிறுவனங்களும்,  சரக்கு ஊர்திகள் இயக்குனர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்த தினசரி விலை உயர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி  நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.  இதுகுறித்து வருகிற 17-ந் தேதி முடிவு எடுத்து அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.